பிறக்கப்போகும் குழந்தையை ஃபேஸ்புக் மூலம் விற்க முயன்றவர் கைது
மகாராஷ்டிர மாநிலத்தில் பிறக்கப் போகும் குழந்தையை ஃபேஸ்புக் மூலம் விற்பனை செய்ய முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


ஔரங்காபாத்: மகாராஷ்டிர மாநிலத்தில் பிறக்கப் போகும் குழந்தையை ஃபேஸ்புக் மூலம் விற்பனை செய்ய முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கணவரிடம் இருந்து பிரிந்து வாழும் 7 மாத கர்ப்பிணிக்குப் பிறக்கப்போகும் குழந்தையை ஃபேஸ்புக் மூலம் விற்பனை செய்ய முயன்றதாக உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஷிவ்ஷங்கர் தகாடே, தனது உறவினர் பெண், கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், வேறு ஒருவரை திருமணம் செய்ய விரும்புகிறார். இதற்கு பிறக்கப்போகும் குழந்தை தடையாக இருக்கும் என்று குடும்பத்தினர் கருதினர்.
இதையடுத்து ஷிவ்ஷங்கர், ஃபேஸ்புக் மூலம் பிறக்கப்போகும் குழந்தையை வாங்கிக் கொள்ள விருப்பமுள்ளவர்கள் அணுகலாம் என்று விளம்பரம் கொடுத்திருந்தார்.
இது குறித்த தகவல் அந்த மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், ஷிவ்ஷங்கரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...