உத்தரப்பிரதேசத்தில் கர்ப்பிணிக்காக ரத்த தானம் அளித்த காவலர்
உத்தரப்பிரதேசத்தில் கர்ப்பிணியின் உறவினர்களோ, கணவரோ மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே, அறுவை சிகிச்சைக்குத் தேவையான ரத்தத்தை காவலர் ஒருவரே தானமாக வழங்கிய சம்பவம் மனதை நெகிழச் செய்கிறது.


உத்தரப்பிரதேசத்தில் கர்ப்பிணியின் உறவினர்களோ, கணவரோ மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே, அறுவை சிகிச்சைக்குத் தேவையான ரத்தத்தை காவலர் ஒருவரே தானமாக வழங்கிய சம்பவம் மனதை நெகிழச் செய்கிறது.
நொய்டாவில் நடந்த இந்த சம்பவம் பற்றி பெண்ணின் தந்தை கூறுகையில், 9 மாத கர்ப்பிணியாக இருந்த மகள் நேஹா தாக்குர் (24), பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 2 யூனிட் ரத்தம் தேவைப்பட்டது. ஊரடங்கு காரணமாக அவரது கணவரால் மருத்துவமனைக்கு வர முடியவில்லை.
என் உறவினர்களுக்கு அழைப்பு விடுத்தும் அவர்களாலும் மருத்துவமனைக்கு வர முடியவில்லை. உடனே 112 அவசர தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு காவல்துறையின் உதவியை நாடினேன்.
உடனடியாக உதவி கிடைத்தது. ஆம், இரண்டு காவலர்கள் நேராக மருத்துவமனைக்கு வந்தனர். ஒருவர் என் மகளுக்காக ரத்த தானம் அளித்தார் என்று கூறினார்.
இது பற்றி காவல்துறை தரப்பில், பொதுமக்களிடம் இருந்து வந்த அழைப்பு குறித்து காவல்துறை குழுவுக்கு தெரிவிக்கப்பட்டு, உடனடியாக ரத்த தானம் அளிக்க யாராவது முன் வருகிறீர்களா என்று கேட்கப்பட்டது. உடனடியாக இரண்டு பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உதவி செய்யப்பட்டுள்ளது.
உடனடியாக கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இருவரும் நலமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...