ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

மத்தியப் பிரதேசத்தில் காவல் ஆய்வாளர் கரோனாவுக்கு பலி

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டுக் காவல் ஆய்வாளர்

News image

கோப்புப்படம்

Updated On :21 ஏப்ரல் 2020, 7:31 am

PTI


இந்தூர்: மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டுக் காவல் ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உஜ்ஜைனில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட காவல் ஆய்வாளர் உயர் இரத்த அழுத்த பிரச்னையால் பாதிக்கப்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

அவரது உடல்நிலை, மேலும் மோசமடைந்ததால் 10 நாட்களுக்கு முன்பு அரபிந்தோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் தீவிரமாக முயற்ச்சித்தும் ஆய்வாளரைக் காப்பாற்ற முடியவில்லை என்று உஜ்ஜைன் கூடுதல் காவல் ஆய்வாளர் ரூபேஷ் குமார் திவேதி கூறியுள்ளார். 

உயிரிழந்த காவல் ஆய்வாளரின் மனைவி தார் மாவட்டத்தில் வருவாய் அதிகாரியாக உள்ளார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். உஜ்ஜைனில் உள்ள அம்பர் காலனியை நிர்வகிக்கும் போது அவர் கரோனா நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

உயிரிழந்த காவல் ஆய்வாளருக்கு மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தனது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.