ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

ஹௌராவில் கரோனா பாதித்த பெண்ணுக்குக் குழந்தைப் பிறந்தது

மேற்கு வங்கத்தின் ஹவுரா மாவட்டத்தில் கரோனா பாதித்த பெண் ஒருவர் ஆரோக்கியமான

News image
Updated On :22 ஏப்ரல் 2020, 9:32 am

PTI

ஹௌரா: மேற்கு வங்கத்தின் ஹௌரா மாவட்டத்தில் கரோனா பாதித்த பெண் ஒருவர் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார் என்று மருத்துவமனை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். 

கடந்த ஏப்ரல் 13-ம் தேதி ஃபுலேஸ்வர் பகுதியில் உள்ள சஞ்சிபன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அந்த பெண்ணுக்கு இரத்த பரிசோதனை செய்கையில் கொடிய கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது என்று மருத்துவ இயக்குனர் சுபாஸிஸ் மித்ரா தெரிவித்தார். 

ஹௌரா நகரில் வசிக்கும் அந்தப் பெண் கடந்த திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிரசவத்தின் போது அவருக்கு எந்த சிக்கலும் ஏற்படவில்லை. 

2.7 கிலோ எடையில் குழந்தை பிறந்துள்ளது. தாயும், குழந்தையும் தற்போது நலமாக இருப்பதாகவும், அந்த பெண் தனது கணவருடன் செவ்வாய்க்கிழமை விடியோ அழைப்பு மூலம் பேசினார் என்றும் மருத்துவ இயக்குனர் மித்ரா கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.