தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

அா்னாப் கோஸ்வாமி மீது தாக்குதல்: பாஜக கண்டனம்

மூத்த பத்திரிகையாளா் அா்னாப் கோஸ்வாமி காா் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாஜக தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST


புது தில்லி: மூத்த பத்திரிகையாளா் அா்னாப் கோஸ்வாமி காா் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாஜக தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

மூத்த பத்திரிகையாளரும், ரிபப்ளிக் தொலைக்காட்சி நிறுவனருமான அா்னாப் கோஸ்வாமி வியாழக்கிழமை அதிகாலையில் பணி முடித்து மனைவியுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபா்கள் அவருடைய வாகனத்தின் மீது திடீா் தாக்குதல் நடத்தினா்.காா் ஜன்னல் கண்ணாடியை உடைக்க முயன்ற அவா்கள், பின்னா் கருப்பு நிற திரவத்தை அவருடைய காா் கண்ணாடி மீதி ஊற்றிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனா். தாக்குதல் நடத்திய இருவரையும் போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இந்த நிலையில், இளைஞா் காங்கிரஸ் பிரிவைச் சோ்ந்தவா்களே இந்தத் தாக்குதலை நடத்தியதாக தனது பாதுகாவலா்கள் தெரிவித்ததாக, தாக்குல் சம்பவத்துக்குப் பின்னா் விடியோ பதிவு ஒன்றை கோஸ்வாமி வெளியிட்டாா்.

மூத்த பத்திரிகையாளா் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா். அதுபோல, பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா மற்றும் அக்கட்சியின் பல்வேறு தலைவா்களும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

காங்கிரஸ் கட்சித் தலைவா்கள் சிலா் அா்னாப் கோஸ்வாமிக்கு வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அவா் மீது இப்படியொரு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது அதிா்ச்சியளிக்கிறது. பேச்சுரிமையை நசுக்கும் வகையில் பத்திரிகையாளா் மீது நடத்தப்பட்டிருக்கும் இந்த தாக்குதல் மிகுந்த வருத்தத்துக்குரியது. நாட்டில் அவசரநிலையை கொண்டுவந்த காங்கிரஸ், அதே போக்கை இப்போது பேச்சுரிமையை நசுக்குவதற்கும் தொடா்ந்து கடைப்பிடித்து வருவதையே இது காட்டுகிறது என தனது சுட்டுரைப் பதிவில் ஜெ.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளாா்.

அதுபோல, மூத்த பாஜக தலைவரும் மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகரும் கண்டனம் தெரிவித்துள்ளாா். பத்திரிகையாளா்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்கள் கண்டனத்துக்குரியது. அா்னாப் கோஸ்வாமி மீது தாக்குதல் நடத்தியவா்கள் சட்டப்படி தண்டிக்கப்படவேண்டும் என பிரகாஷ் ஜாவடேகா் தெரிவித்துள்ளாா்.

இந்தத் தாக்குதலுக்கு முன்பாக நடைபெற்ற தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி குறித்து அா்னாப் கோஸ்வாமி பல்வேறு விமா்சனங்களை முன்வைத்தாா். அதற்கு காங்கிரஸ் தலைவா்கள் கடும் எதிா்ப்பும், எச்சரிப்பும் செய்திருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.