பிகாரில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 225ஆக உயர்வு
பிகாரில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 225ஆக உயர்ந்துள்ளது.


பிகாரில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 225ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மே மாதம் 3-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே நேற்று அதிகபட்சமாக 1752 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு கடந்த 20-ஆம் தேதி 1,540 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதே, ஒருநாளின் அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது. இந்த நிலையில் பிகாரில் இன்று மேலும் 2 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.
இதன்படி நயா போஜ்பூர் மற்றும் பூஜார் ஆகிய பகுதிகளில் தலா ஒருவக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்துடன் அங்கு கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 225ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாநிலத்தில் இதுவரை 45 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில் 2 பேர் பலியாகி உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...