விஜயவாடாவில் பயங்கர தீ விபத்து: கரோனா நோயாளிகள் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
ஆந்திரம் மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.


அமராவதி: ஆந்திரம் மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திரம் மாநிலம் விஜயவாடாவில் உள்ள நட்சத்திர ஹோட்டல் சுவர்ணா பேலஸ் கரோனா சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்கு 30 கரோனா நோயாளிகள், 10 மருத்துவமனை ஊழியர்கள் என மொத்தம் 40 பேர் இருந்தனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணியளவில் கரோனா மையத்தில் தீடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. சிகிச்சைக்கான ராசாயன பொருள்கள் பல இருந்ததால் தீ பயங்கரமாக மளமளவென்று பரவ தொடங்கியது.
அதனால் ஏற்பட்ட புகை காரணமாக நோயாளிகள், ஊழியர்களுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது.
தீ விபத்தை அறிந்த ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அரைமணிநேரத்திற்கு மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து கரோனா நோயாளிகள் 7 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 7 நோயாளிகள் மீட்கப்பட்டனர்.
மருத்துவமனைக்குள் இருந்த அனைவரும் தங்களை காப்பாற்றக் கோரி ஜன்னல்கள் முன் வந்து அலறினர்.
விஜயவாடா காவலர்களும், உள்ளூர் வாசிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சுமார் 20 கரோனா நோயாளிகளை காப்பாற்றினர்.
காப்பாற்றப்பட்ட அனைவரும் லப்பிபேட்டையில் உள்ள மெட்ரோபாலிடன் ஹோட்டல் கரோனா மையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக விஜயவாடா காவல் ஆணையர் பி.சீனிவாசுலு தெரிவித்தார்.
இந்நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்றும் வரும் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் மேலும் பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...