ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

கர்நாடகம் : பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தை தற்கொலை

கர்நாடகத்தின் தார்வாட் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட குழந்தை தற்கொலை செய்து கொண்டார்.

News image

கோப்புப்படம்

Updated On :10 ஆகஸ்ட் 2020, 9:53 am

PTI

பெங்களூரு, ஆகஸ்ட் 10 : கர்நாடகத்தின் தார்வாட் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட குழந்தை தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த ஜூலை 30 ஆம் தேதி தார்வாட் கிராமம் போகூரிலுள்ள கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த 8 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தனர்.

வீட்டிற்கு சென்ற சிறுமி தன் தாயிடம் நடந்ததைக் கூறிவிட்டு, தனது அறைக்குச் சென்று விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டார். பின்னர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்த வன்கொடுமை செய்த குற்றவாலியை ஏற்கனவே கைது செய்துவிட்டோம் என தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டார் வெளிட்ட சுட்டுரையில்,
 
தார்வாட் மாவட்டத்தில் உள்ள போகூர் கிராமத்தில் அண்மையில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதால் தற்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை நான் சந்தித்து அவர்களை ஆறுதல்படுத்தினேன். மேலும் இவர்களுக்கு நீதி கிடைக்க உத்திரவாதம் அளிக்கின்றேன் என்று  கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.