ஆன்லைன் தேர்வுகளை ரத்து செய்ய பல்கலைக்கழக இணையதளத்தை கைப்பற்றிய மாணவர் கைது
குஜராத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த ஆன்லைன் தேர்வுகளை ரத்து செய்ய பல்கலைக்கழகத்தின் இணையத்தை ஹேக் செய்த 22 வயதான மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.


குஜராத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த ஆன்லைன் தேர்வுகளை ரத்து செய்ய பல்கலைக்கழகத்தின் இணையத்தை ஹேக் செய்த 22 வயதான மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாடு முழுவதும் கரோனா தொற்று பரவலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகளும், அதனைத் தொடர்ந்து தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் குஜராத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆறாவது செமஸ்டர் பட்டப்படிப்பு, முதுகலை மற்றும் டிப்ளோமா படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகளை அறிவித்திருந்தது.
இந்நிலையில் ஆன்லைன் தேர்வுகளை ரத்து செய்வதற்காக பல்கலைக்கழகத்தின் இணையதளத்தின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் நோக்கில் 22 வயதான மின்பொறியியல் மாணவர் ஒருவர் அதனை ஹேக் செய்த சம்பவம் நடந்துள்ளது.
ஜூலை 29 அன்று பல்கலைக்கழகம் அறிவித்திருந்த ஆன்லைன் தேர்வில் பங்கேற்ற 1,275 மாணவர்களின் தனிப்பட்ட தகவல்களான புகைப்படங்கள், ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை விவரங்கள் ஆகியவை சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியைக் கிளப்பியது.
இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழக பதிவாளர் காவல்துறைக்கு எழுத்துப்பூர்வ புகாரை அகமதாபாத் சைபர் கிரைம் பிரிவுக்கு சமர்ப்பித்தார். இந்த புகாரின் மீது விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மாணவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாணவர் மீது தகவல் தொழில்நுட்ப திருத்தச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...