விவசாயிகள் போராட்டத்தில் பீம் ஆர்மி தலைவர்
தில்லி-காஸிபூர் எல்லையில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் தனது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் பங்கேற்றுள்ளார்.


தில்லி-காஸிபூர் எல்லையில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் தனது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் பங்கேற்றுள்ளார்.
இதுகுறித்து சந்திரசேகர் ஆசாத் தெரிவித்ததாவது:
"இந்த குளிரிலும் விவசாயிகள் தங்களது உரிமைகளுக்காகப் போராடுகின்றனர். வேளாண் சட்டங்கள் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். நமது விவசாயிகளுக்கு எங்களது முழு ஆதரவையும் அளிக்கிறோம். இந்தப் போராட்டத்தில் நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம்."
முன்னதாக, மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், கரோனா பெருந்தொற்று மற்றும் குளிரைக் கருத்தில்கொண்டு டிசம்பர் 3-ம் தேதிக்குப் பதில் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்த விவசாயத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இதுபற்றி விவசாயத் தலைவர் பலிஜீத் சிங் தெரிவிக்கையில், "இன்று பிற்பகல் 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு விடுத்த அழைப்பை ஏற்பதாக எங்களுடைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மத்திய அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...