மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லி போராட்டத்திற்கு ஆதரவு: ஹரியாணா அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்ற எம்.எல்.ஏ.

தில்லி விவசாயப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஹரியாணா மாநில பாஜக அரசுக்கான ஆதரவை சுயேட்சை எம்.எல்.ஏ. சோம்பீர் சங்வான் திரும்பப் பெற்றார்.

News image
தில்லியில் விவசாயிகள் போராட்டம்
Updated On :1 டிசம்பர் 2020, 10:15 am

DIN

தில்லி விவசாயப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஹரியாணா மாநில பாஜக அரசுக்கான ஆதரவை சுயேட்சை எம்.எல்.ஏ. சோம்பீர் சங்வான் திரும்பப் பெற்றார்.

தில்லியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகின்றனர். தொடர்ந்து 6ஆவது நாளாக தொடரும் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தில்லி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஹரியாணா மாநில சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் சோம்பீர் சங்வான் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த தனது ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.

மேலும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கால்நடை மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். தொடர்ந்து ஹரியாணா எல்லையில் நடைபெறும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்திலும் தன்னை இணைத்துக் கொள்ள உள்ளதாக சோம்பீர் சங்வான் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.