இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

7-ஆவது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்

தலைநகர் தில்லியில் விவசாயிகளின் போராட்டம் 7-ஆவது நாளாக புதன்கிழமையும் நீடித்து வருகிறது.  இதையடுத்து, தில்லியையொட்டியுள்ள  எல்லைப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 

News image
7-ஆவது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்
Updated On :2 டிசம்பர் 2020, 3:43 am

DIN


புதுதில்லி: தலைநகர் தில்லியில் விவசாயிகளின் போராட்டம் 7-ஆவது நாளாக புதன்கிழமையும் நீடித்து வருகிறது.  இதையடுத்து, தில்லியையொட்டியுள்ள  எல்லைப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 

மத்திய அரசு கடந்த செப்டம்பரில் வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்து மூன்று சட்டங்களைக் கொண்டு வந்தது. விவசாயிகள் உற்பத்தி வா்த்தகம் மற்றும் வா்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) அவசரச் சட்டம் 2020, விவசாயிகள் ஒப்பந்தச் சட்டம், அத்தியாவசியப் பொருள்கள் (திருத்தம்) அவசரச் சட்டம் 2020 ஆகிய மூன்று சட்டங்களைக் கொண்டு வந்தது.

இந்தச் சட்டங்களை எதிா்த்து விவசாயிகள் தில்லி எல்லையில் தொடர் முற்றுகை போராட்டத்தை நடத்தி வருகின்றனா்.

இதையடுத்து விவசாயப் பிரதிநிதிகளுடன் செவ்வாய்க்கிழமை விஞ்ஞான் பவனில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், அமைச்சர்கள் பியூஷ் கோயல், சோம் பிரகாஷ் உள்ளிட்டோரும், 35 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மூன்று மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில்,  "புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவாதித்து முடிவு எடுக்க நிபுணர் குழுவை நியமிக்கலாம்' என்று மத்திய அரசு தெரிவித்த யோசனையை விவசாயிகள் நிராகரித்ததால் விவசாயிகள் பிரச்னையில் இழுபறி நீடித்தது. மேலும், "திருத்தப்பட்ட வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதைத் தவிர வேறு எந்த முடிவையும் ஏற்கமாட்டோம். போராட்டம் தொடரும்' என்றும் விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இதையடுத்து எந்தவித முடிவும் எட்டப்படாமல் நாளை வியாழக்கிழமைக்கு (டிச.3) பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், புதிய வேளாண் சட்டங்களை ரத்துச் செய்ய வலியுறுத்தி தில்லி எல்லையில் 7-ஆவது நாளாக விவசாயிகள் தொடர் முற்றுகை போராட்டத்தை நடத்தி வருகின்றனா்.

இதையடுத்து தில்லியை ஒட்டியுள்ள எல்லைப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

எல்லையில் விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தால் தில்லியிலிருந்து பக்கத்து மாநிலங்களுக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.