யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

‘அமைதியாகப் போராட விவசாயிகளுக்கு உரிமை உள்ளது’: ஐ.நா. கருத்து

அமைதியான முறையில் போராட விவசாயிகளுக்கு உரிமை உள்ளது என்றும் அவர்களின் போராட்டங்களுக்கு அரசு அனுமதியளிக்க வேண்டும் எனவும் ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

News image
‘அமைதியாகப் போராட விவசாயிகளுக்கு உரிமை உள்ளது’: ஐ.நா. கருத்து
Updated On :5 டிசம்பர் 2020, 9:51 am

DIN

அமைதியான முறையில் போராட விவசாயிகளுக்கு உரிமை உள்ளது என்றும் அவர்களின் போராட்டங்களுக்கு அரசு அனுமதியளிக்க வேண்டும் எனவும் ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் கடந்த 10 நாள்களாக தில்லியில் நடைபெற்று வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்த கேள்விக்கு ஐக்கிய நாடுகள் அவையின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் பதிலளித்தார்.

அமைதியாகப் போராட்டம் போராட்டம் செய்ய மக்களுக்கு உரிமை உள்ளது எனத் தெரிவித்த டுஜாரிக் அதிகாரிகள் அவர்களை அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ ஆதரவளித்த நிலையில் இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, உள்நாட்டு விவகாரங்களில் கனடா தலையிடுவது தேவையற்றது என கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.