விவசாயிகள் போராட்டம்: விளையாட்டுத் திடலாக மாறிய சாலைகள்

வேளாண் சட்டத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டதால், தில்லியில் முடங்கிய சாலைகள் தற்போது விளையாட்டுத் திடல்களாக மாறியுள்ளன.
விவசாயிகள் போராட்டம்: விளையாட்டுத் திடலாக மாறிய சாலைகள்
விவசாயிகள் போராட்டம்: விளையாட்டுத் திடலாக மாறிய சாலைகள்
Updated on
1 min read

வேளாண் சட்டத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டதால், தில்லியில் முடங்கிய சாலைகள் தற்போது விளையாட்டுத் திடல்களாக மாறியுள்ளன.

பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் கூடாரங்களை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், வாகனங்களின்றி வெறிச்சோடிய சாலைகளை உள்ளூர் சிறுவர்கள் விளையாட்டுத் திடல்களாக மாற்றியுள்ளனர்.

சாலைகளில் கிரிக்கெட் விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது போன்ற செயல்களில் சிறுவர்களும், இளைஞர்களும் ஈடுபட்டுள்ளனர். காலை முதலே நெடுஞ்சாலையில் விளையாடி களைத்து, தேவையான உணவினை போராட்டக்களத்தில் விவசாயிகளுடன் உண்டு மீண்டும் விளையாடத் தொடர்கின்றனர்.

ஒருசில வேளைகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் சிறுவர்களுடன் இணைந்து விளையாடி போராட்டக்களத்தையே பொழுதுபோக்கு அம்சமாக மாற்றி வருகின்றனர்.

கடந்த சில நாள்களாக தில்லி நெடுஞ்சாலைகளில் அரசுக்கு எதிரான கோஷங்களை மட்டுமே பார்த்து வந்த நிலையில், தற்போது விளையாட்டுத் திடலின் சத்தங்களையும் கேட்பது போராட்டக்களத்தில் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com