

கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா விரைவில் குணமடைய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜெ.பி. நட்டாவுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுறுத்தல்களின்பேரில் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் மம்தா பானர்ஜி பதிவிட்டுள்ளதாவது:
"பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் தகவலை அறிந்தேன். அவர் விரைவில் குணமடைந்து நல்ல உடல்நலம் பெற வாழ்த்துகிறேன். இந்த நேரத்தில் எனது பிரார்த்தனைகள் நட்டாவுடனும், அவரது குடும்பத்தினருடனும் உள்ளன."
ஜெ.பி. நட்டாவின் மேற்கு வங்க பயணத்தின்போது நடந்த தாக்குதல் சம்பவத்தினால், மத்திய அரசுக்கும் மேற்கு வங்க அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு உச்சத்துக்குச் சென்றது. நட்டா வாகனம் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க தலைமைச் செயலருக்கும், காவல் துறை டிஜிபிக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அழைப்பாணை அனுப்பியது. ஆனால், அவர்கள் இருவரையும் தில்லிக்கு அனுப்பப் போவதில்லை என்று மம்தா பானர்ஜி அரசு முடிவெடுத்தது.
இந்த நிலையில், நட்டா குணமடைய வேண்டி மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.