கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ரூ.1.49 லட்சம் மின் கட்டணம்: ஆந்திர கூலித் தொழிலாளிக்கு அதிர்ச்சி

ஆந்திர மாநிலம் கனேகால் பகுதியில் வாழ்ந்து வரும் கே. நாகம்மா, தனது கூரை வீட்டுக்கு வந்த மின் கட்டணத்தைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளார்.

News image
ரூ.1.49 லட்சம் மின் கட்டணம்: ஆந்திர கூலித் தொழிலாளிக்கு அதிர்ச்சி
Updated On :17 டிசம்பர் 2020, 6:06 am

DIN


அனந்த்பூர்: ஆந்திர மாநிலம் கனேகால் பகுதியில் வாழ்ந்து வரும் கே. நாகம்மா, தனது கூரை வீட்டுக்கு வந்த மின் கட்டணத்தைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளார்.

ஒரு மின் விசிறி, தொலைக்காட்சி, ஒரு மின் விளக்கு இருக்கும் தனது வீட்டுக்கு வழக்கமான ரூ.100 என்ற அளவுக்குத்தான் மாத மின் கட்டணம் வருவது வழக்கம். அதுவும் குறைந்தபட்ச மின் கட்டணம் ரூ.50, வாடிக்கையாளர் கட்டணம் ரூ.25, தாமதமாகக் கட்டுவதற்கு அபராதம் ரூ.25 சேர்த்துத்தான் ரூ.100 செலுத்துவேன்.

ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரையிலான மின் கட்டணம் தற்போது வந்திருக்கிறது. ஏதோ 500 அல்லது 1000 வந்திருக்கும் என்று பார்த்தால், ரூ.1,49,034 மின் கட்டணம் வந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன் என்கிறார். கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஏழு மாதமாக நான் மின் கட்டணம் கட்டவில்லை. அப்படியே இருந்தாலும் அது ஒரு ஆயிரம் ரூபாய் அளவுக்குத்தான் வந்திருக்க வேண்டும் என்று தன் பக்க நியாயத்தைக் கேட்கிறார்.

இது பற்றி மின்துறையிடம் விசாரித்த போது, இது நிச்சயம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம், எங்களிடம் வாடிக்கையாளர் மின் கட்டண ரசீதைக் கொண்டு வந்தால் நிச்சயம் அதனை சரி செய்து தருவோம். கோளாறு சரி செய்யப்பட்டதும், அவரடமிருந்து வழக்கமான மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்று விளக்கம் அளித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.