

2020-ஆம் ஆண்டு முடிவதற்கு முன்பாக விவசாயப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது, ''வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பல்வேறு விவசாயக் குழுக்களுடன் மத்திய அரசு முறைசாரா விவாதங்களை மேற்கொண்டுள்ளது.
ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த விவகாரத்தில் ஆண்டு முடிவதற்குள் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று நம்புவதாகக் குறிப்பிட்டார்.
விவசாய சமூகத்தின் அனைத்து நியாயமான கவலைகளையும் தீர்க்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது. அதனால் விவசாயிகள் கவலை கொள்ள வேண்டாம்.
விவசாயத் துறையில் மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்கள் குறித்த தங்கள் நிலைப்பாட்டை எதிர்க்கட்சிகள் மாற்றித் திரித்து அரசியலாக்குகின்றனர் என்றும் கூறினார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக 5 கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், தில்லி எல்லையில் கடும் குளிருக்கு மத்தியில் விவசாயிகள் தொடர்ந்து தங்களது போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டம் நான்காவது வாரத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.