

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு உயிரிழந்த விவசாயிகளுக்கு தில்லி - உத்தரப்பிரதேச எல்லையில் மரியாதை செலுத்தப்பட்டது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த நான்கு வாரங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் உடல்நிலை மோசமடைந்தும், தற்கொலை செய்துகொண்டும் சுமார் 30க்கும் அதிகமான விவசாயிகள் உயிரிழந்தனர்.
எனினும் மத்திய அரசு விவசாயிகளுடம் இன்னும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை மேற்கொள்ளாமல் உள்ளது.
இதனிடையே போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு தில்லி - உத்தரப்பிரதேச எல்லையான காஸிப்பூர் பகுதியில் மரியாதை செலுத்தப்பட்டது.
புராரியில் உள்ள நிரங்கரி சமகம் மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பேரணியாக சென்று உயிரிழந்த விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.