இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மன் கி பாத்தில் பிரதமர் பேசும்போது பாத்திரங்களைத் தட்டி ஒலி எழுப்புங்கள்: விவசாயிகள்

டிசம்பர் 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி முடியும் வரை அனைவரும் பாத்திரங்களைத் தட்டி ஒலி எழுப்புமாறு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 2:15 pm

DIN


டிசம்பர் 27-ம் தேதி மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் பேசும்போது நாட்டு மக்கள் பாத்திரங்களைத் தட்டி ஒலி எழுப்புமாறு விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் இன்று 25-வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில் சிங்கு எல்லையில் விவசாயிகள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது விவசாய சங்கங்கள் தெரிவித்தது:

"டிசம்பர் 27-இல் மன் கி பாத் நிகழ்ச்சியின்போது, பிரதமர் பேசி முடிக்கும் வரை பாத்திரங்களைத் தட்டி ஒலி எழுப்ப வேண்டும் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்."

விவசாயத் தலைவர் ஜஸ்பீர் சிங் பேசியது:

விவசாயிகள் குறித்து அவதூறு பரப்ப அரசு முயற்சிக்கிறது. குளிர் நிறைந்த இரவுகளில் விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். அரசு எங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். ஆனால், எங்கள் மீது அவதூறு பரப்புவதில் மும்முரமாக உள்ளனர். ஈகோவைக் கைவிடுமாறு வேளாண் துறை அமைச்சரையும், மத்திய அரசையும் கேட்டுக்கொள்கிறேன். இளைஞர்களும், குழந்தைகளும் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்."

கிராந்திகாரி விவசாயிகள் சங்கத்தின் தர்ஷன் பால் சிங் கூறியது:

"இந்த சமூகத்துக்கு அச்சுறுத்தலானவர்கள் என்பதைப்போன்ற தோற்றத்தை உண்டாக அரசு முற்படுவதை கண்டிக்கிறோம். அதை நிறுத்த வேண்டும்."

ஸ்வராஜ் இந்தியா தலைவர் யோகேந்திர யாதவ் தெரிவித்தது:

"விவசாயிகளின் உணர்வுதான் தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை முற்றுகையிட ஊக்கமளித்தது. ராஜஸ்தான் மற்றும் பிற நகரங்களிலிருந்து மக்கள் வருகின்றனர். விவசாயிகளைத் தடுத்து நிறுத்தும் ஹரியாணா அரசின் செயல் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்படுவதை நிறுத்திக்கொள்ளுமாறு ஹரியாணா அரசைக் கேட்டுக்கொள்கிறேன்."   

மற்றொரு விவசாயத் தலைவர் ஜக்ஜீத் சிங் பேசியது:

"அனைத்து விவசாயத் தலைவர்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளைச் சந்தித்து வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி அரசைக் கட்டாயப்படுத்துமாறு கேட்டுக்கொள்ள இருக்கிறோம். அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையெனில் அவர்களையும் புறக்கணிப்போம்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.