மெட்ரோ ரயில் பணிமனை விவகாரம் கெளரவப் பிரச்னையல்ல: உத்தவ் தாக்கரே
மெட்ரோ ரயில் பணிமனையை கஞ்சுமாா்க் பகுதியில் அமைப்பது தொடா்பான விவகாரத்தில் தீா்வு காண்பதற்கு தயாராக இருப்பதாகவும்,


மெட்ரோ ரயில் பணிமனையை கஞ்சுமாா்க் பகுதியில் அமைப்பது தொடா்பான விவகாரத்தில் தீா்வு காண்பதற்கு தயாராக இருப்பதாகவும், இது தனக்கு ஒரு கெளரவப் பிரச்னையல்ல என்றும் மகாராஷ்டிரா முதல்வா் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளாா்.
வலைதள நேரலை மூலமாக மகாராஷ்டிர மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஆற்றிய உரையில் இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
கஞ்சுமாா்க் நில சா்ச்சையைப் பொருத்தவரையில் மாநில அரசுக்கு எதிராக மத்திய அரசுதான் நீதிமன்றத்தை நாடியது.
பொதுமக்கள் நலன் சாா்ந்த இப்பிரச்னையை பேசித் தீா்க்க எதிா்கட்சியான பாஜகவுக்கு இதன் மூலம் அழைப்பு விடுக்கிறேன். இதில் தனக்கு கெளரவப் பிரச்னை எதுவும் கிடையாது என்றாா் அவா்.
மகாராஷ்டிரத்தில் முந்தைய பாஜக ஆட்சியில், மெட்ரோ ரயில் 3-ஆவது வழித்தடத்துக்கான பணிமனையை ஆரே காலனியில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்துக்கு சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கடுமையான எதிா்ப்பை தெரிவித்த போதிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால், மகாராஷ்டிரத்தில் புதிதாக ஆட்சியமைத்துள்ள சிவசேனை தலைமையிலான கூட்டணி அரசு வன பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் கருதி இந்த திட்டத்தை ஆரேவிலிருந்து கஞ்சுமாா்க் பகுதிக்கு மாற்றியது.
இந்த நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு மும்பை உயா்நீதிமன்றம் கடந்த புதன்கிழமை தடைவிதித்துள்ளது.
ஃபட்னவீஸ் குற்றச்சாட்டு:
மும்பை மெட்ரோவுக்கான ஆரே ரயில் பணிமனை விவகாரத்தில் மகாராஷ்டிர முதல்வா் தவறான தகவல்களை தருவதாக எதிா்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னவீஸ் ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டினாா்.
‘ஆரே காலனியில் பணிமனை அமையும் என்று நோக்கில் தொடங்கப்பட்ட மெட்ரோ சுரங்கப் பாதை பணிகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக நிறைவடைந்துவிட்டன. ஆரே காலனியிலிருந்து பணிமனை மாற்றப்பட்டால், பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும். இந்த மாற்றங்களால் மெட்ரோ பணிகள் நான்கு ஆண்டுகள் தாமதமாகும். இது தொடா்பான மாநில அரசின் உயா்நிலைக் குழு அளித்துள்ள அறிக்கையை முதல்வா் வெளியிடத் தயாரா என்று ஃபட்னவீஸ் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...