இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஜெகன்மோகன் ரெட்டி பிறந்த நாள்: விதிகளை மீறி கட்சியினர் ஊர்வலம்

திருப்பதியில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சியினர் பொது முடக்க விதிமுறைகளை மீறி ஊர்வலம் நடத்தினர்.

News image
திருப்பதியில் விதிமுறைகளை பின்பற்றாமல் நடந்த பிறந்த நாள் ஊர்வலம்.
Updated On :22 டிசம்பர் 2020, 12:23 am

DIN


திருப்பதி: திருப்பதியில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சியினர் பொது முடக்க விதிமுறைகளை மீறி ஊர்வலம் நடத்தினர்.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டியின் 48ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சியினர் மாநிலம் முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்தும், கேக் வெட்டியும், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், அன்ன தானம், ரத்த தானம், பொருள் தானம் என செய்து வருகின்றனர். 

இந்நிலையில் திருப்பதி எம்எல்ஏ கருணாகர ரெட்டி, முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் திருப்பதியில் பெரும் ஊர்வலம் நடத்தினார். 

இதில் கலந்து கொண்ட தொண்டர்கள் யாரும் பொது முடக்க விதிமுறைகளை பின்பற்றவில்லை. அனைவரும் நெருங்கி கூட்டத்தோடு கூட்டமாக முகக்கவசம் அணியாமல் சாலையில் ஊர்வலம் சென்றனர். நாடு முழுவதும் மீண்டும் கரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வரும் இந்நிலையில் தொண்டர்கள் இவ்வாறு நடந்து கொண்டது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏழுமலையான் பிரசாதம்: ஆந்திர முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி தேவஸ்தான அதிகாரிகளுடன் இணைந்து ஜெகன்மோகனைச் சந்தித்து ஏழுமலையான் லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கி சேஷ வஸ்திரம் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.