முகக்கவசம், சமூக இடைவெளியின்றி நடந்த பாஜக எம்.எல்.ஏ.வின் திருமணம்

புணேவில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி பாஜக எம்.எல்.ஏ.வின் திருமணம் நடந்துள்ளது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புணேவில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி பாஜக எம்.எல்.ஏ.வின் திருமணம் நடந்துள்ளது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. 

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் மால்ஷிராஸ் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ராம் சாத்புட் என்பவரின் திருமணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருமணத்தில் கட்சியின் மூத்தத் தலைவர்கள் பலர் இதில் பங்கேற்றனர். இந்நிலையில் திருமணத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை, திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் யாரும் முகக்கவசம் அணியவில்லை. 

இதுதொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில், மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பட்டீல் மற்றும் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முகக்கவசம் அணியாமல் அங்குள்ளவர்களிடம் உரையாடிய விடியோ வைரலாகி வருகிறது. 

மகாராஷ்டிர அரசின் வழிகாட்டுதல்களின்படி, 50 பேர் வரையில் திருமண விழாவில் கலந்துகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இவ்விழாவில் நூற்றுக்கணக்கனோர் கலந்துகொண்டனர். 

இதுகுறித்து காவல்துறையில் யாரும் புகார் பதிவு செய்யவில்லை என்று காவல் ஆய்வாளர் சஞ்சீவன் ஜக்டலே தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com