தில்லியில் ராகுல்காந்தி தலைமையில் பேரணி

தில்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு தீர்வு காண வலியுறுத்தி குடியரசுத்தலைவரை சந்திக்கும் விதமாக காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி தலைமையில் பேரணி தொடங்கியுள்ளது.
தில்லியில் ராகுல்காந்தி தலைமையில் பேரணி (கோப்புப்படம்)
தில்லியில் ராகுல்காந்தி தலைமையில் பேரணி (கோப்புப்படம்)
Updated on
1 min read

தில்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு தீர்வு காண வலியுறுத்தி குடியரசுத்தலைவரை சந்திக்கும் விதமாக காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி தலைமையில் பேரணி தொடங்கியுள்ளது.

விஜய் சௌக்கிலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகை வரை காங்கிரஸ் எம்.பி.களுடன் சேர்ந்து ராகுல் காந்தி பேரணி மேற்கொண்டுள்ளார்.

பின்னர் ராகுல் காந்தியும் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் குடியரசுத் தலைவரைச் சந்தித்து, விவசாயிகள் போராட்டத்தில் தலையிட்டு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக 2 கோடி கையெழுத்துகளை அளிக்கவுள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக 29-வது நாளாக விவசாயிகள் தில்லியின் பல்வேறு எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com