வேளாண் சட்டங்கள்: திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு ஜாவடேகர் சவால்

வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவாதம் நடத்துவதற்கு திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு சவால் விடுப்பதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
மறைமலைநகரில் நடைபெற்ற விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசுகிறார்.
மறைமலைநகரில் நடைபெற்ற விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசுகிறார்.
Updated on
1 min read


வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவாதம் நடத்துவதற்கு திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு சவால் விடுப்பதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுவதாகவும், விவசாயிகளுக்கு வேளாண் சட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறினார்.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள திடலில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்வில் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய அவர், ''தமிழகத்தில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று நம்புகிறோம். தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மற்ற கட்சிகள் குடும்பக் கட்சிகளாக உள்ளன. பாஜக மக்கள் நலன் சார்ந்த கட்சியாக உள்ளது.

நாடு முழுவதும் பாஜகவின் வெற்றி அதிகரித்துள்ளது. எல்லா இடங்களிலும் காங்கிரஸ் கட்சி சரிவையே சந்தித்து வருகிறது. 

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கவே மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் விவசாயிகளுக்கு கிடைத்த வருவாய் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அதிகரித்துள்ளது.

எனினும் விவசாயிகள் பாஜகவிற்கு எதிராக தவறாக வழிநடத்தப்படுகின்றனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. ஆனால் உண்மையில் அச்சட்டங்களால் விவசாயிகள் மகிழ்ச்சியாகவே உள்ளனர்.

வேளாண் சட்டங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும். விவசாய உற்பத்தி சந்தைக் குழுவிற்கு எந்த பாதகமும் ஏற்படாது'' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com