தில்லியில் 30-வது நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில் குவிந்துள்ள விவசாயிகளின் போராட்டம் 30-வது நாளை எட்டியுள்ளது.


வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில் குவிந்துள்ள விவசாயிகளின் போராட்டம் 30-வது நாளை எட்டியுள்ளது.
கடும் குளிருக்கு மத்தியில் பலருக்கு உடல்நிலை மோசமடைந்த நிலையிலும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் ஊறுதியுடன் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசு உறுதியான திட்டத்தோடு முன்வந்தால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்கள் கடந்த 23-ஆம் தேதி அறிவித்தன.
மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் தில்லியை முற்றுகையிட்டு நான்காவது வாரமாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசுடன் ஐந்து கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்னரும் தீா்வு எட்டப்படவில்லை. இதையடுத்து, 3 சட்டங்களையும் முழுமையாக திரும்பப்பெற்ற பின்னரே, அரசுடன் அடுத்தகட்டபேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என்று கூறி விவசாயிகள் போராட்டத்தைத் தொடா்ந்து நடத்தி வருகின்றனா்.
இதனிடையே விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட மத்திய அரசு விவசாயிகளுக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. இதற்கு முன்பு கடந்த 20-ஆம் தேதி பேச்சுவார்த்தைக்காக மத்திய அரசு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
சிங்கு, டிக்ரி எல்லையில் கடும் குளிருக்கு மத்தியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உடல்நலக் குறைவாலும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு முகாம்கள் அமைத்து தன்னார்வலர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...