இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தில்லியில் 31-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 31 ஆவது நாளாக தொடா் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

News image
Updated On :26 டிசம்பர் 2020, 3:11 am

DIN

புது தில்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 31 ஆவது நாளாக தொடா் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லி எல்லைகளில் விவசாயிகள் கடந்த 30 நாள்களாக தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் தொடர் போராட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. அதைத் தொடா்ந்து நடைபெறவிருந்த 6-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை ரத்து செய்யப்பட்டது.

மேலும் வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசு அனுப்பிய பரிந்துரைகளை விவசாய சங்கங்கள் நிராகரித்தன. அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையில் பங்கேற்குமாறு மத்திய அரசு விடுத்த அழைப்புகளையும் விவசாயிகள் நிராகரித்தனா். விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாக மத்திய அரசு தொடா்ந்து தெரிவித்து வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகளின் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், யார் போராடினாலும் வேளாண் திருத்தச் சட்டம் தொடர்ந்து நீடிக்கும் என்று கூறினார். 

இந்நிலையில், தில்லி எல்லைகளில் விவசாயிகளின் போராட்டம் 31 ஆவது நாள்களாக தொடர்கிறது. விவசாயிகளின் போராட்டத்தில் பல ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டும் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டு வருவதால் ரயில்வே துறைக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.