விவசாயிகள் போராட்டத்தை அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்: சரத் பவார்

​புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தெரிவித்ததாவது:

"விவசாயிகளின் ஒட்டுமொத்த போராட்டத்தையும் அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தீர்வு காணப்பட வேண்டும். 4 அல்லது 5 பேர் தற்கொலை செய்துகொண்டதாகக் கேள்விபட்டேன். இதே நிலை நீடித்தால் அது நாட்டுக்கு நல்லதல்ல."

மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தில்லி எல்லைகளை முற்றுகையிட்டு கடந்த 33 நாள்களாக போராடி வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஐந்து முறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோதும் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில் வரும் 30-ம் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com