மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிகாரில் ஒரேநாளில் 1,294 பேருக்கு கரோனா தொற்று

பிகாரில் ஒரேநாளில் 1,294 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :26 ஜூலை 2020, 11:55 am

DIN

பிகாரில் ஒரேநாளில் 1,294 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிகார் மாநிலத்தில் கரோனா வைரஸ் தாக்‍கம் நாளுக்‍கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து அங்கு ஜூலை 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிகாரில் நேற்று ஒரேநாளில் 1,294 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இத்துடன் மாநிலத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 38,919ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 12,461 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கரோனாவிலிருந்து இதுவரை 24,528 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் மாநிலத்தில் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 67.52 ஆக உள்ளது. 

இந்தியாவில் ஒரே நாளில் 48,661 பேர் தொற்றுக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,85,522 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.