2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

மகாராஷ்டிரத்தில் புதிதாக 7,924 பேருக்கு கரோனா

​மகாராஷ்டிரத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 7,924 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
​மகாராஷ்டிரத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 7,924 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
Updated On :27 ஜூலை 2020, 3:38 pm

DIN


மகாராஷ்டிரத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 7,924 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் அந்த மாநில சுகாதாரத் துறையால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, அங்கு புதிதாக 7,924 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 227 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,83,723 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 13,883 ஆக உள்ளது.

அதேசமயம் இன்று 8,706 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 2,21,944 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் அங்கு 1,47,592 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அங்கு குணமடைவோர் விகிதம் 57.84 சதவிகிதம். இறப்பு விகிதம் 3.62 சதவிகிதம்.

மும்பை:

மும்பையில் இன்று புதிதாக 1,033 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 39 பேர் பலியாகியுள்ளனர். 1,706 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,10,129 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 6,129 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 81,944 பேர் குணமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.