மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அசோக் கெலாட்டுக்கும், காங்கிரஸுக்கும் பாடம் கற்பிக்க நேரம் பார்த்துக் காத்திருந்தோம்: மாயாவதி

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், காங்கிரஸுக்கும் பாடம் கற்பிப்பேன் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். 

News image
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி
Updated On :28 ஜூலை 2020, 11:09 am

DIN

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், காங்கிரஸுக்கும் பாடம் கற்பிக்க தகுந்த நேரம் பார்த்து காத்திருந்ததாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையேயான மோதல் மாநில அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சச்சின் பைலட் உள்ளிட்ட 19 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. மேலும், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த சூழ்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தனது கட்சியின் 6 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸில் இணைந்ததற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர், 'காங்கிரஸுக்கு எதிராக நாங்கள் முன்னதாகவே நீதிமன்றம் சென்றிருக்க வேண்டும். ஆனால், காங்கிரஸூக்கும், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் பாடம் கற்பிக்க தகுந்த நேரம் பார்த்து காத்துக் கொண்டிருந்தோம். தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம். சமீபத்தில் காங்கிரஸில் இணைந்த தனது கட்சியின் 6 எம்.எல்.ஏக்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை கூட செல்வேன்' என்று கூறியுள்ளார். 

முன்னதாக, பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸில் இணைந்ததற்கு எதிராக பாஜக சார்பில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு பகுஜன் சமாஜ் கட்சி கூறியுள்ளது. 

ராஜஸ்தானில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில், சட்டப்பேரவையில் அசோக் கெலாட்டுக்கு பெரும்பான்மை கிடைக்க பகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்.எல்.ஏக்கள்தான் உதவியுள்ளனர். தற்போது அசோக் கெலாட்டுக்கு பெரும்பான்மையை விட கூடுதலாக ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கெனவே ராஜஸ்தான் அரசியல் சூழலில் பல்வேறு பிரச்னைகள் உள்ள நிலையில், தற்போது பகுஜன் சமாஜ் கட்சியும் நீதிமன்றத்தை நாடியுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.