தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 3,007 பேருக்கு கரோனா தொற்று

மகாராஷ்டிரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் புதிதாக 3,007 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஜூன் 2020, 4:58 pm

DIN


மகாராஷ்டிரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் புதிதாக 3,007 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம், மும்பை மற்றும் தாராவியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,007 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 91 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 85,975 ஆகவும், மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 3,060 ஆகவும் உயர்ந்துள்ளது. 43,591 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மும்பை:

மும்பையில் இன்று புதிதாக 1,421 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 61 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 48,549 ஆக உயர்ந்துள்ளது. இதில், 25,717 பேர் சிகிச்சையில் உள்ளனர், 21,196 பேர் குணமடைந்துள்ளனர். 1,636 பேர் பலியாகியுள்ளனர்.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில், புதிதாக 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தாராவியில் மட்டும் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,912 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதிதாக யாரும் பலியாகவில்லை. இதன்மூலம், பலி எண்ணிக்கை 71 ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.