மகாராஷ்டிரத்தில் 90 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு
மகாராஷ்டிரத்தில் இன்று (செவ்வாய்கிழமை) புதிதாக 2,259 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


மகாராஷ்டிரத்தில் இன்று (செவ்வாய்கிழமை) புதிதாக 2,259 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரம் மற்றும் மும்பையில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிரம்:
மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,259 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 120 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 90,787 ஆக உயர்ந்துள்ளது. இதில் 42,638 பேர் குணமடைந்துள்ளனர், 44,849 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தம் 3,289 பேர் பலியாகியுள்ளனர்.
மும்பை:
மும்பையில் புதிதாக 1,015 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 58 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மும்பையில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 50,878 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 904 பேர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, குணமடைந்தோர் எண்ணிக்கை 22,942 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 1,758 பேர் பலியாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...