/

ஆந்திரத்தில் 15 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 7 பேர் பலி

ஆந்திரத்தில் மேலும் 704 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில் அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை எட்டுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

News image

ஆந்திரத்தில் 15 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு

Updated On :30 ஜூன் 2020, 9:51 am

ANI

ஆந்திரத்தில் மேலும் 704 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில் அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை எட்டுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி புதிதாகப் பாதிக்கப்பட்ட 704 பேரில், வெளி மாநிலத்தைச் சேர்ந்த 51 பேருக்கும், வெளி நாடுகளிலிருந்து 5 பேருக்கும் தொற்று பதிவாகியுள்ளது. மேலும், ஒரே நாளில் 258 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் ஏழு பேர் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். இவர்களில் இருவர் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், கிருஷ்ணா மாவட்டத்தில் மூன்று பேர், குண்டூர் மற்றும் அனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். 

ஆந்திரத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,595 ஆக உள்ளது. இதில் 7,897 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை 6,511 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.