திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

கரோனா: சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை?

கேரளாவில் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், பள்ளிச் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை நினைத்து அவர்களது பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். 

News image

மாதிரிப் படம்

Updated On :10 மார்ச் 2020, 5:22 am


கேரளாவில் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், பள்ளிச் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை நினைத்து அவர்களது பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். 

இதனால், கேரள மாநிலத்தில் சிபிஎஸ்இ பள்ளிகள் கோடை விடுமுறையை முன்கூட்டியே அறிவிக்க திட்டமிட்டுள்ளன.

குறிப்பாக மழலையர் பள்ளிகளுக்காவது கோடை விடுமுறை முன்கூட்டியே அறிவிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கொச்சியில் உள்ள பெரும்பாலான சிபிஎஸ்இ பள்ளிகள், மழலையர் வகுப்புகளுக்கு வரும் திங்கட்கிழமையே கடைசி நாள் என்று குறுந்தகவல் அனுப்பியுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மழலையர்களுக்கு அறிவுறுத்தவோ, அவர்களை அதன்படி செயல்படுமாறு வலியுறுத்தவோ முடியாது என்பதால், மழலையர் வகுப்புகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்படும் என்று சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான தேசிய கவுன்சில் பொதுச் செயலர் இந்திரா ராஜன் தெரிவித்துள்ளார்.

அதே சமயம், 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளையும் மேற்கொள்ளுமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் இதுவரை ஆறு பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.