திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

மேற்கு வங்கத்தில் முதல் பலி: இத்தாலியில் இருந்து திரும்பிய 57 வயது முதியவர்

மேற்கு வங்கத்தில் கரோனா பாதித்து சிகிச்சைப் பெற்று வந்த 57 வயது முதியவர் இன்று மதியம் உயிரிழந்தார்.

News image
Updated On :23 மார்ச் 2020, 12:12 pm


கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கரோனா பாதித்து சிகிச்சைப் பெற்று வந்த 57 வயது முதியவர் இன்று மதியம் உயிரிழந்தார்.

இத்தாலியில் இருந்து திரும்பி வந்த நிலையில், இவருக்கு கடந்த சனிக்கிழமை கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் உயிரிழந்தார். இது மேற்கு வங்கத்தில் முதல் உயிரிழப்பாகும். இவரையும் சேர்த்து இந்தியாவில் கரோனா பாதித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் இன்று மரணம் அடைந்தவரின் மனைவி, மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இரண்டு பேர் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுவிட்டனர். அவரது வீட்டுப் பணிப்பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கரோனா பாதித்து மரணம் அடைந்தவரின் மகன் இத்தாலியில் படித்துக் கொண்டிருந்தார். அவரும் கடந்த மாதம் தான் இந்தியா திரும்பியுள்ளார். இதற்கிடையே சமீபத்தில் இவர்கள் சட்டீஸ்கரில் ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளனர். அவர்களுடன் பயணித்தவர்களையும் கண்டறியும் பணி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.