கைதிகளை பரோலில் விடுவிப்பது தொடர்பாக மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
கரோனா அச்சுறுத்தல் காரணமாக கைதிகளை பரோலில் விடுவிப்பது தொடர்பாக மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கரோனா அச்சுறுத்தல் காரணமாக கைதிகளை பரோலில் விடுவிப்பது தொடர்பாக மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் அதன் ஒருபகுதியாக, சிறைகளில் உள்ள கைதிகளை பரோலில் விடுவிப்பது தொடர்பாக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில், 'சிறைகளில் கரோனா வைரஸ் தாக்கம் ஏற்படாமல்/ அதிகரிக்காமல் இருக்க 7 ஆண்டுகள் வரை தண்டனை பெற்றுள்ள குற்றவாளிகள், விசாரணைக் கைதிகளை 4 முதல் 6 வாரங்கள் வரை பரோலில் விடுவிப்பது தொடர்பாக மாநில அரசுகள் முடிவெடுக்கலாம். இதற்காக மாநில அரசு ஒரு குழுவை அமைத்து சட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...