இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கரோனா: பி.சி.சி.ஐ. சார்பில் ரூ.51 கோடி நிதியுதவி

கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக பி.சி.சி.ஐ. ரூ.51 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது. 

News image
Updated On :28 மார்ச் 2020, 4:30 pm

DIN

கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக பி.சி.சி.ஐ. ரூ.51 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்று தற்போது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இதையடுத்து கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனாவுக்கு இதுவரை 918 பாதிக்கப்பட்ட நிலையில் 19 பேர் பலியாகியுள்ளனர். 80 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 

இந்த நிலையில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக மக்கள் நிதியுதவி அளிக்கலாம் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து பல்வேறு தரப்பினர் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் பி.சி.சி.ஐ. சார்பில் ரூ.51 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் ரூ.52 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். 

அதில் ரூ. 21 லட்சம் உத்தரபிரதேச முதல்வர் நிவாரண நிதியாகவும், மற்றொரு ரூ. 31 லட்சம் பிரதமர் நிவாரண நிதியாகவும் அவர் வழங்கியுள்ளார். இதுகுறித்து ரெய்னா தனது டிவிட்டரில், கரோனாவை வீழ்த்த நாம் நம்மால் முடிந்த உதவிகளை செய்யும் நேரம் இது. நான் ரூ. 52 லட்சத்தை கரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்காக வழங்குகிறேன். நீங்களும் உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். ஜெய்ஹிந்த். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.