ரயில் பெட்டிகளை தனி வார்டுகளாக மாற்றும் பணி தொடக்கம்
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோருக்கு சிகிச்சையளிப்பதற்காக ரயில் பெட்டிகளை தனி வார்டுகளாக மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.


கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோருக்கு சிகிச்சையளிப்பதற்காக ரயில் பெட்டிகளை தனி வார்டுகளாக மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே (என்எஃப்ஆர்) தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் சுபனன் சந்தா ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கையில்,
"இந்தியாவின் 17 ரயில்வே மண்டலங்களில், வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே மற்றும் வடக்கு ரயில்வேவை முதலாவதாக சோதனை அடிப்படையில் ரயில்வே பெட்டிகளை தனி வார்டுகளாக மாற்றுமாறு ரயில்வே வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தத் திட்டம் அரசுக்கு உதவும் வகையில் இருக்கும்.
ரயில்வேயின் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகு காமாக்யா மற்றும் குவாஹட்டியில் உள்ள ரயில் பெட்டி பராமரிப்பு மையத்தில் ரயில் பெட்டிகளை தனி வார்டுகளாக மாற்றும் பணி தொடங்கியுள்ளது. ஏசி அல்லாத சாதாரண பெட்டிகள் ஏற்கெனவே தனி வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. ரயில் பெட்டியில் உள்ள ஒவ்வொரு கேபினும், ஒருவரை உள்ளடக்கும் வகையில் தனி வார்டுகளாக மாற்றப்படும். ஒரு பெட்டியில் அதுபோன்று 9 கேபின்கள் உள்ளன. ஒரு பெட்டியில் இருக்கும் 4 கழிவறைகளில் ஒன்றை குளியலறையாகப் பயன்படுத்தும் வகையில் மாற்றப்படும்.
வெப்பத்தைத் தணிப்பதற்கான ரயில் பெட்டியின் மேற்கூரை மற்றும் இரண்டு பக்கங்களிலும் மூங்கில் தட்டிகளால் மறைக்கப்படும்.
ரயில் பெட்டிகளை தனி வார்டுகளாக மாற்றப்படும் இந்த சோதனை முயற்சி கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோருக்கு சிகிச்சையளிக்க பயன்படும் வகையில் அமைந்தால், அனைத்து 17 ரயில்வே மண்டலங்களையும் இதுபோன்று ரயில் பெட்டிகளை தனி வார்டுகளாக மாற்ற ரயில் வாரியம் அறிவுறுத்தும்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...