ஜம்மு காஷ்மீரில் கரோனாவுக்கு 2ஆவது நபர் பலி
ஜம்மு காஷ்மீரில் கரோனாவுக்கு 2ஆவது நபர் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.


ஜம்மு காஷ்மீரில் கரோனாவுக்கு 2ஆவது நபர் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று, தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், நாட்டில் முன்னெப்போதும் இல்லாத இக்கட்டான சூழல் எழுந்துள்ளது.
கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஸ்ரீநகரில் இன்று காலை கரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் பலியானார் என்று காஷ்மீர் அரசின் செய்தி தொடர்பாளர் ரோஹித் கன்சால் தெரிவித்துள்ளார்.
இத்துடன் ஜம்மு காஷ்மீரில் கரோனாவுக்கு பலியானர்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...