ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

ஒடிசாவில் மேலும் ஒருவருக்கு கரோனா: பாதிப்பு 163 ஆனது

ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்த எண்ணிக்கை 163 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

News image
Updated On :4 மே 2020, 5:29 am

PTI

புவனேஸ்வர்: ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்த எண்ணிக்கை 163 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

புதிதாகப் பாதிக்கப்பட்டவரைத் தொடர்ந்து அந்த மாவட்டத்தில் பாதிப்பு 11 ஆக உயர்ந்துள்ளது. அவற்றில் 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 பேர் குணமடைந்துள்ளனர். 

பழங்குடியினர் வசிக்கும் மாவட்டமான சுந்தர்கர் மாவட்டம் 'ஆரஞ்சு' மண்டலத்தில் உள்ளது என்றார். ஞாயிற்றுக்கிழமை மட்டும் மொத்தம் 2,470 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரி தெரிவித்தார். 

ஒடிசா அரசு இதுவரை 41,128 மாதிரிகளைப் பரிசோதித்துள்ளது. மொத்தம் 163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 102 சிகிச்சையில் உள்ளனர். 60 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

புவனேஸ்வரைச் சேர்ந்த ஒருவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி இந்த நோயால் இறந்தார். ஜாஜ்பூர் (48), புவனேஸ்வர் (47), பாலசூரில் (21), பத்ரக்கில் (19), சுந்தர்கரில் (11) வழக்குகள் பதிவாகியுள்ளன.

கஞ்சம், ஜார்சுகுடா, கேந்திரபாரா, போலாங்கிர், கியோஞ்சர் மற்றும் கலஹந்தி ஆகிய இடங்களில் தலா இரண்டு வழக்குகள் மற்றும் கட்டாக், பூரி, தெங்கனல், தியோகர் மற்றும் கோராபுத் மாவட்டங்களில் தலா ஒரு வழக்குகளும் பதிவாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.