முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

பாஜகவினருக்கு முன்னுதாரணமாக விளங்குபவர் அத்வானி: பிரதமர்

கோடிக்கணக்கான பாஜகவினருக்கும் முன்னுதாரணமாக விளங்குபவர் மூத்தத் தலைவர் எல்.கே.அத்வானி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

News image
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)
Updated On :8 நவம்பர் 2020, 5:54 am

DIN

கோடிக்கணக்கான பாஜகவினருக்கும் முன்னுதாரணமாக விளங்குபவர் மூத்தத் தலைவர் எல்.கே.அத்வானி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்தத் தலைவர் எல்.கே.அத்வானி இன்று தமது 93வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனிடையே அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, வாஜபேயி தலைமையிலான ஆட்சியில் உள்துறை அமைச்சராகவும், துணை பிரதமராகவும் அத்வானி சேவையாற்றியவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

கோடிக்கணக்கான பாஜக தொண்டர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் முன்னுதாரணமாக இருப்பவர் அத்வானி. அவர் மேலும் பல ஆண்டுகள் வளமுடன் வாழ வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

பாஜகவின் மிக நீண்டகாலத் தலைவராக இருந்த எல்.கே.அத்வானி அக்கட்சியி வளர்ச்சிக்கு மிகமுக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.