முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

அத்வானியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பிரதமர் மோடி

அத்வானியின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
எல்.கே.அத்வானியுடன் பிரதமர் மோடி
Updated On :8 நவம்பர் 2020, 8:03 am

DIN

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்தத் தலைவர் எல்.கே.அத்வானி இன்று தனது 93வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து பாஜக மூத்த தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Story image

பிரதமர் நரேந்திர மோடி, அத்வானியின் வீட்டிற்கு  நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், கேக் வெட்டி அவரது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி. 

Story image

முன்னதாக அவர், வாஜ்பேயி தலைமையிலான ஆட்சியில் உள்துறை அமைச்சராகவும், துணை பிரதமராகவும் அத்வானி சேவையாற்றியவர் என்றும் கோடிக்கணக்கான பாஜக தொண்டர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் அவர் மேலும் பல ஆண்டுகள் வளமுடன் வாழ வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.