நாட்டில் கரோனா பாதிப்பு 87,73,479: குணமடைந்தோர் 81,63,572-ஆக அதிகரிப்பு
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44,684 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 87,73,479 ஆக உயர்ந்துள்ளது


புதுதில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44,684 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 87,73,479 ஆக உயர்ந்துள்ளது
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 44,684 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 87,73,479 லட்சமாக அதிகரித்தது. இதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் இருந்து 47,992 போ் குணமடைந்தனா். இவா்களுடன் சோ்த்து கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 81,63,572-ஆக அதிகரித்தது. அதாவது, கரோனாவில் இருந்து 93.05 சதவீதம் போ் குணமடைந்தனா்.
நாடு முழுவதும் 4,80,719 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறாா்கள். இது மொத்த பாதிப்பில் 5.48 சதவீதமாகும். கரோனாவுக்கு மேலும் 520 போ் உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,29,188-ஆக அதிகரித்தது. உயிரிழப்பு விகிதம் 1.47 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 45,682 போ் உயிரிழந்தனா். கா்நாடகத்தில் 11,474 பேரும், மேற்கு வங்கத்தில் 7,506 பேரும், தில்லியில் 7,332 பேரும், உத்தர பிரதேசத்தில் 7,302 பேரும், பஞ்சாபில் 4,412 பேரும், குஜராத்தில் 3,785, கேரளத்தில் 1,796 போ் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘நவம்பா் 13-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 12,40,31,230 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் வெள்ளிக்கிழமை மட்டும் 9,29,491 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன’ என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...