விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பெரிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை: அகிலேஷ் திட்டவட்டம்

​உத்தரப் பிரதேச தேர்தலில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :14 நவம்பர் 2020, 1:42 pm

DIN


உத்தரப் பிரதேச தேர்தலில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் எடாவா நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அகிலேஷ் யாதவ் தெரிவித்ததாவது:

"சிறிய கட்சிகளைப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்கு சாத்தியமில்லை. சிவபால் யாதவ் கட்சியைக் கூட பொறுத்துக் கொள்வோம். ஜஸ்வந்த் நகர் சிவபால் யாதவ் தொகுதி. சமாஜவாதி அந்தத் தொகுதியை அவருக்கு ஒதுக்கியது. வரும் காலங்களில் அந்தக் கட்சித் தலைவர்களுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும். இதைவிட வேறு என்ன வேண்டும்."

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் சகோதரர் சிவபால் யாதவ். 2017 பேரவைத் தேர்தலில் ஜஸ்வந்த் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, கட்சிக்குள் எழுந்த பிரச்னை காரணமாக பிரகதிஷீல் சமாஜவாதி என்ற கட்சியைத் தொடங்கினார். 2019 மக்களவைத் தேர்தலில் சொந்த சின்னத்தில் ஃபிரோசாபாத்தில் போட்டியிட்டார்.

உத்தரப் பிரதேசத்தில் 2022-ம் ஆண்டு பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.