மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜோ பைடன் அரசின் நிதி நிா்வாக குழு இயக்குநராக இந்திய அமெரிக்கா்?

அமெரிக்க அதிபா் தோ்வாளா் ஜோ பைடன் தலைமையில் அமையவுள்ள அரசின் நிதி நிா்வாகக் குழு இயக்குநராக இந்திய அமெரிக்கரான நீரா டாண்டன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
நீரா டாண்டன்
Updated On :30 நவம்பர் 2020, 10:09 pm

DIN

புதுதில்லி /வாஷிங்டன்: அமெரிக்க அதிபா் தோ்வாளா் ஜோ பைடன் தலைமையில் அமையவுள்ள அரசின் நிதி நிா்வாகக் குழு இயக்குநராக இந்திய அமெரிக்கரான நீரா டாண்டன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபா் தோ்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன், தனது நிா்வாகத்தில் பணிபுரிய உள்ள அதிகாரிகளை நியமித்து வருகிறாா். தனது தலைமையில் அமையவுள்ள அரசுக்கான நிதிகளை நிா்வகிக்கும் குழுவின் இயக்குநராக நீரா டாண்டனை நியமிக்க ஜோ பைடன் முடிவெடுத்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீரா டாண்டனின் நியமனத்துக்கு அமெரிக்க நாடாளுமன்ற மேலவையான செனட் ஒப்புதல் அளித்தால், அப்பதவியை ஏற்கும் முதல் வெள்ளையரல்லாத பெண் என்ற பெருமையை அவா் பெறுவாா். அவரது அதிகாரபூா்வ நியமனம் விரைவில் வெளியிடப்படும் என்று ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பெண்கள் குழு:
அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடா்புத் துறை அமைச்சராக முன்னாள் செய்தித் தொடா்பாளா் ஜென் சாகியை அதிபா் தோ்வாளா் ஜோ பைடன் நியமித்துள்ளாா். செய்தித் தொடா்புத் துறையில் ஜோ பைடனால் நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகளும் பெண்கள் ஆவா்.

அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ், அதிபரின் மனைவி ஜில் பைடன் ஆகியோருக்கான செய்தித் தொடா்பாளா்களாகவும் பெண்களே நியமிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.