கரோனா குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை பிரதமர் மோடி தமது சுட்டுரைப் பக்கத்தில் துவக்கி வைத்தார்.
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மத்திய அரசு சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்படும் என்று நேற்று (புதன்கிழமை) மத்திய சுற்றூச்சூழல் நலத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்திருந்தார்.
அதன்படி கரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது சுட்டுரைப் பக்கத்தில் துவக்கி வைத்தார்.
இது குறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், ''கரோனாவுக்கு எதிரான போரில் முன்கள வீரர்களால் நாட்டு மக்கள் நம்பிக்கையையும், பலத்தையும் பெற்றுள்ளனர். நமது கூட்டு முயற்சி பலரது உயிரை காக்கச் செய்துள்ளது. கரோனாவுக்கு எதிரான வேகத்தை குறைத்துக்கொள்ளாமல் தொடர்ந்து போராடி தொற்றிலிருந்து நாட்டு மக்களை காக்க வேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், ''முகக்கவசம் அணிவோம், கைகளை அடிக்கடி கழுவுவோம், சமூக இடைவெளியை கடைப்பிடிப்போம், ஒன்றாக வெற்றிபெறுவோம், ஒன்றாக கரோனாவுக்கு எதிராக வெல்வோம்'' என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே? நான்குநேரி கொலைச் சம்பவத்துக்கு விஜய் கண்டனம்!

அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் யார்? வெளியான தகவல்!

முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

ஈரானின் இதயத்தைத் துளைத்த ஏவுகணைகள்.. அமெரிக்கா வெளியிட்ட புதிய விடியோ!
வீடியோக்கள்

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

