பிகார் தேர்தல்: குழுக்கள் அமைத்தது காங்கிரஸ்
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி பல்வேறு குழுக்களை அமைத்துள்ளார்.


பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி பல்வேறு குழுக்களை அமைத்துள்ளார்.
தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக் குழு, விளம்பரக் குழு, ஊடக ஒருங்கிணைப்புக் குழு, பொதுக் கூட்டம் மற்றும் செயல்படுத்துதல் குழு, சட்டக் குழு மற்றும் அலுவல் மேலாண்மைக் குழு ஆகிய குழுக்களை அமைத்துள்ளார்.
தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு தலைமை வகிக்கும் பொறுப்பு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரண்தீப் சுர்ஜேவாலாவிடம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒருங்கிணைப்பாளராக மோகன் பிரகாஷ் உள்ளார்.
சுபோத் குமார் விளம்பரக் குழுவுக்கு தலைமை வகிக்கிறார். பவண் கேரா ஊடகக் குழுவுக்கு தலைமை வகிக்கிறார். அசோக் ராம் அலுவல் மேலாண்மைக் குழுவை வழிநடத்துகிறார். சட்டக் குழுவை வருண் சோப்ரா வழிநடத்துகிறார்.
தேர்தல் பிரசாரத்துக்கான நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை நேற்று அறிவித்த நிலையில், காங்கிரஸ் இன்று தேர்தலுக்காக குழுக்களை அமைத்துள்ளது.
பிகாரில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 என 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...