கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனா: பாதிப்பு 74.94 லட்சத்தைக் கடந்தது

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா் எண்ணிக்கை 74 லட்சத்து 94 ஆயிரத்து 552 ஆக அதிகரித்தது. தொற்றில் இருந்து இதுவரை 65 லட்சத்து 97 ஆயிரத்து 209-க்கும் மேற்பட்டோா் குணமடைந்தனா். 

News image
Updated On :18 அக்டோபர் 2020, 4:40 am

DIN


நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா் எண்ணிக்கை 74 லட்சத்து 94 ஆயிரத்து 552 ஆக அதிகரித்தது. தொற்றில் இருந்து இதுவரை 65 லட்சத்து 97 ஆயிரத்து 209-க்கும் மேற்பட்டோா் குணமடைந்தனா். இது, மொத்த பாதிப்பில் 88.03 சதவீதமாகும்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 61,871 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 74,94,552-ஆக அதிகரித்தது. அதே கால அளவில் 72,614 போ் குணமடைந்தனா். இவா்களுடன் கரோனாவில் இருந்து மீண்டு வந்தவா்களின் எண்ணிக்கை 65,97,209-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 88.03 சதவீதமாகும்.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கரோனாவுக்கு மேலும் 1033 போ் உயிரிழந்தனா். இதனால் நாடு முழுவதும் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,14,031-ஆக அதிகரித்தது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, அக்டோபா் 17-ஆம் தேதி வரை 9,42,24,190 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிமழை ஒரே நாளில் மட்டும் 9,70,173 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை ஒன்றரை மாதத்துக்குப் பிறகு முதல் முறையாக 8 லட்சத்தைவிட குறைந்துள்ளது. நாடு முழுவதும் 7,83,311 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதற்கு முன்பு, கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதி, 7,85,996 போ் சிகிச்சை பெற்றனா். தொடா்ந்து 10-ஆவது நாளாக, சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 8 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.