இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஃபரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத் துறை விசாரணை

ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் அமைப்பின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத் துறை இன்று

News image
ஃபரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத் துறை விசாரணை
Updated On :19 அக்டோபர் 2020, 10:35 am

ANI


ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் அமைப்பின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத் துறை இன்று விசாரணை நடத்தியது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல்வராக இருந்த போது, அந்த மாநிலத்தின் கிரிக்கெட் அமைப்பின் நிதியை ஃபரூக் அப்துல்லா முறைகேடாக பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருந்தபோது, 2002 - 2011 வரை பிசிசிஐ வழங்கிய நிதியிலிருந்து ரூ.43 கோடியை ஃபரூக் அப்துல்லா முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில், நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அமலாக்கத் துறை அதிகாரிகள் ஃபரூக் அப்துல்லாவிடம் இன்று விசாரணை நடத்தியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.