முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

'காவலர்களின் பணி, தியாகம் என்றுமே நினைவுகூரத்தக்கது'

காவலர்களின் தியாகம் மற்றும் பணி என்றுமே நினைவுகூரத்தக்கது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

News image
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)
Updated On :21 அக்டோபர் 2020, 5:55 am

DIN

காவலர்களின் தியாகம் மற்றும் பணி என்றுமே நினைவுகூரத்தக்கது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு உயிர் நீத்த காவலர்களை நினைவுகூறும் விதமாகவும், அவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ஆம் தேதி காவலர்களின் வீர வணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 

அந்தவகையில் இந்த இன்று கடைப்பிடிக்கப்படும் காவலர் வீர வணக்க நாளையொட்டி காவலர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ''காவலர் வீர வணக்க நாள் என்பது காவலர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் நன்றி தெரிவிப்பதாகும்.

நாட்டுக்காக ஆற்றும் கடமையின்போது உயிர்த்தியாகம் செய்த அனைத்து காவல்துறையினருக்கும் நாங்கள் மரியாதை செலுத்துகிறோம். அவர்களின் தியாகமும் சேவையும் எப்போதும் நினைவில் இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

''சட்டம் ஒழுங்கை காப்பதிலிருந்து குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கும் வரை, பேரிடர் மீட்புப் பணிகள் முதல் கரோனாவுக்கு எதிரான போராட்டம் வரை நமது காவலர்களின் பணி அளப்பறியது. காவல்துறையின் தயார்நிலை மற்றும் விடாமுயற்சி பெருமிதமளிக்கிறது'' என்று சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.